Wednesday, March 30, 2011

தேர்தல் களத்தில் தேவேந்திரர்கள்...
பகுஜன் சமாஜ் கட்சியின் சாதனை...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்களுக்கு அதிகார பகிர்வை உறுதிப்படுத்தும் விதமாக 52 தேவேந்திரர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவி பெஹஞ்சி மாயாவதிக்கும் அவரது சிந்தனை வார்ப்பு பிரமோத் குறில் mp அவர்களுக்கும் நன்றி...

Tuesday, March 22, 2011

வாக்களிப்போம் யானை சின்னத்தில் .......

வாக்களிப்போம் யானை சின்னத்தில் .......

நம் நாட்டில் நமக்கு உள்ள பல உரிமைகளில் முக்கியமானது ஓட்டுரிமை. நமது முக்கிய கடமையும் ஓட்டுப்போடுவது தான். எவ்வளவு பெரிய அரசியல்வாதியும் தேர்தல் வந்தால் நிச்சயம் வாக்காளரை தேடி வரவேண்டும் இது தான் நம் நாட்டு ஜனநாயகம்..

தேர்தல் நேருங்கிக்கொண்டு இருக்கிறது இந்திய தேர்தல் ஆணைம் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் தயாரித்து வருகிறார்கள் நாமும் வாக்குச்சாவடிக்கு சென்று நமக்கு ஓட்டு இருக்கின்றதா இல்லையா என்று தேட வேண்டியதில்லை தேர்தல் ஆணையம் ஓர் அற்புதமான பணியை செய்துள்ளது அனைத்தும் இணையதளத்தில் கொண்டு வந்து விட்டார்கள் நாம் நமக்கு ஓட்டு இருக்கிறதா இல்லையா என்று சரி பார்த்துக்கொள்ளலாம்.

நமது பெயரை சரிபார்க்க பார்க்க கீழே உள்ள இணையதத்தை

இவ் இணையதளத்தில் கொடுத்துள்ள அடட்வணையில் மாவட்டம், தொகுதி, வாக்காளர் பெயர், தாய், தந்தை, கணவர் பெயரை கொடுததால் வாக்காளரின் அனைத்து விவரங்களும் வருகின்றது. நமது வீட்டு எண்ணை போய்ப்பார்த்தால் நம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரது பெயரும் விவரங்களும் இருக்கிறது. அனைவரும் அறிய வேணடிய தகவல்...

நன்றி... இந்திய தேர்தல் ஆணையம்...

சனநாயகம் காத்திட, சாமானியரும் அதிகாரம் பெற, உழைக்கும் மக்களின் விடுதலையை நோக்கி, சமத்துவ, சமூக நீதி சமுதாயம் மலர வாக்களிப்போம் யானைசின்னத்தில் . . . . .

வாக்களிப்போம் யானைசின்னத்தில் . . . . .

Saturday, March 5, 2011

King Rajaraja Cholar


ராஜா ராஜா சோழரின் நல்லாட்சியின் மறு கட்டமைப்பே பகுஜன்  ஆட்சி.


பறிக்கப்பட்ட ஆட்சி அதிகார மீட்புக்கான நடை பயணம்...

கல்லணை முதல் தஞ்சை ராஜா ராஜா சோழர் சிலை வரை..

நாள் 01 .03 . 2011  முதல் 06 . 03 .2011 வரை.

மாண்புமிகு பிரமோத் குறில் MP ( பாராளுமன்ற நிலை குழு உறுப்பினர் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம், ஆலோசனை குழு உறுப்பினர் - சமூக மேம்பட்டு அமைச்சகம்)
அவர்களது தலைமையில் சமரசமற்ற போராளி திரு இ பா ஜீவன் குமார் (பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுசெயலாளர்)  மற்றும் திரு அரங்கராஜன் (மாநில பொதுசெயலாளர் தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி )முன்னிலையில் காவேரி நதிக்கரையின் இரு மருங்கிலும் வாழ்ந்து வரும் வேளாண்மை குடி  மக்கள் சுமார் 500 பேருடன்  மாமன்னன் கரிகால்  சோழர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பான தொடர் நடை பயணம்   துவங்கப்பட்டது.





பார்த்து பார்த்து வளர்த்த பயிர் பச்சையெல்லாம் வெள்ளம் கொண்டுபோக வேனல் தாக்கி கருக்க ஆடு மாடு கடித்து அழிக்க இழப்பின் துயரை இதயத்தில் இதயத்தில் ஏந்தி மீண்டும் மீண்டும் விதைப் பெட்டி தூக்கும் வெள்ளை மனசுக்காரர்களே...

உங்களுக்கு வரலாறு உங்கள் வரலாறு தெரியுமா புனித  புத்தரின் புது பிறப்பு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சொல்கிறார் ... நீ ஒரு  சமூகத்தை
நிர்மூலமாக்க வேண்டுமானால் அதன் வரலாற்றை அழித்தால் போதும் அந்த சமூகம் தானாக அழிந்து விடும். அப்படியெனில் வரலாறு எதை சொல்கிறது?


வரலாறு அனைத்தும் ஆட்சியாளர்களைப் பற்றியதே தவிர அடிமைகளை பற்றி அல்ல.
அக நாம் எதை நிர்மாணிக்க வேண்டுமானாலும் அதன் சமூக அடித்தளம் அறியாமல் கட்டமைக்க முடியாது.


ஆகவே இன்றைய தமிழகம் பற்றி தெரியாமல் சோழ மண்டலம் குறிப்பாக சோழர் கால ஆட்சி அதிகாரம் பற்றியது. இதை முற்கால சோழர்கள் பிற்கால சோழர்கள் எனவும் மர்ரடியர்கள் நாயக்கர்கள் காலத்து ஆட்சியையும் உள்ளடக்கமாகும். கி பி இரண்டாம் நூற்றாண்டில் காவேரியும் கொள்ளிடமும் இணையும் இடத்தில திருசிராப்பள்ளியிலிருந்து சுமார் பதினேழு கிலோ மீட்டர் கிழக்கே கல்லணை களிமண் சுண்ணாம்பால் கரிகால் சோழரால் கட்டப்பட்டது. இது சுமார் 1215337  ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியளிகிறது.

கி பி எட்டாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரையில் ஆண்ட சோழ மன்னர்களின் ஆட்சி என்பது தமிழகத்தின் நெற் களஞ்சியமாகவும் சோழ நாடு சோறுடைத்து எனவும் பெருமை போற்றும் porkkaalamakavum திகழ்ந்தது. பொன்னிக்கு கரை கண்ட பூபதியே என ஓட்டக்குத்தர் பாடியதும் ஈழத்திலிருந்து பிதினாராயிரம் பேரை சிறை பிடித்து கரிகாலன் காவேரிக்கு கரை கண்டான் என்கிறது வரலாறு. சோழர்கள் மன்னர்களாக மட்டுமல்லாது காவேரி பள்ளத்தாக்கில் வெள்ளாண்மை தொழிலில் ஈடுபட்டு வந்த வேளாளர்கள் என்றும் ஏறும் போரும் இணைபிரியாதவர்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் பி தி சீனிவாச அயன்கர் கூறுகிறார்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த ராஜா ராஜா சோழருகே கோவிலுக்குள் இடமில்லை. அதற்க்கான காரணம் அவர் பௌத்த மத ஆதரவாளராக இருந்தார். ஆகவே அவர் தீண்டத்தகாதவர் ஆக்க பட்டார். அவர் நாகப்பட்டணத்தில் ஸ்ரீ விஜய பேரரசர் ஸ்ரீ மாற விஜயோத்துங்க வர்மனின் வேண்டுகோளை ஏற்று சூடாமணி விகாரத்தை பௌத்தர்களுக்காக கட்டினார். ராஜா ராஜா பெரும்பள்ளி ராஜேந்திர பெர்ம்பள்ளி ஆகிய பௌத்த பள்ளிகளும் சோழர் காலத்தியதே.